புதிய இடதுசாரி அரசியல் சக்தியை உருவாக்க உவிந்து விஜேவீர மும்முரம்

JVP political party uvindu wijeweera
By Vanan Jan 16, 2022 10:02 AM GMT
Report

தனியான அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின்(JVP) ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் புதல்வர் கலாநிதி உவிந்து விஜேவீர(Uvindu Wijeweera) தெரிவித்துள்ளார்.

கண்டியில் அஸ்கிரிய விகாரையின் பிரதி ஆவணக் காப்பாளர் நாரம்பனாவே ஆனந்த தேரரைச் சந்தித்த போது இதனைக் கூறிய அவர், எந்த அரசியல் கட்சிக்கும் முட்டுக்கொடுக்காத, புதிய இடதுசாரி அரசியல் அமைப்பாக கட்சியை உருவாக்கப்போவதாக கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நான் ஆரம்பிக்கும் அரசியல் அமைப்பு சுயாதீன அமைப்பு ஆகும். எந்த அரசியல் கட்சிகளுடனும் சம்பந்தப்பட போவதில்லை.

அனைவரும் இணங்கக் கூடிய, நாட்டை கட்டியெழுப்பும் தேசிய சிந்தனையை தொனிப் பொருளாகக் கொண்டதாக எமது புதிய கட்சி இருக்கும்.

தேசிய வேலைத்திட்டத்தை முன்வைத்த பின்னர் பொது மக்கள் இணையக் கூடியதான பெயர், நிறத்துடன் அரசியல் கட்சியை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளளோம் என்றார்.

உவிந்து விஜேவீரவின் தந்தை ரோஹன விஜேவீர(Rohana Wijeweera), இலங்கையில் இடதுசாரி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் இரண்டு ஆயுத கிளர்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார்.

எனினும் அவை தோல்வியில் முடிந்தன. இந்தக் கிளர்ச்சிகள் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன் இறுதியில் விஜேவீர உட்பட ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து 90 ஆம் ஆண்டுகளில் கிளர்ச்சியில் உயிர் தப்பிய சோமவன்ச அமரசிங்க (Somavansa Amarasinghe)உட்பட மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்களால் மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் கட்டியெழுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023