கொழும்பில் 97 சதவீதமான ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
vaccine
sri lanka
people
teachers
By Shalini
கொழும்பு மாவட்டத்தில் 97 சதவீதமான ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல் மாகாணத்தில் மட்டும் 86 சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கம்பஹா மாவட்டத்தில் 81 சதவீத ஆசிரியர்களுக்கும், களுத்துறை மாவட்டத்தில் 82 சதவீத ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் 90 சதவீதம் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி