குப்பைகளால் நிரம்பியுள்ள வடமராட்சி கிழக்கு கடற்கரை வீதிகள்
Jaffna
Dengue Prevalence in Sri Lanka
Floods In Sri Lanka
By Erimalai
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்கரை வீதிகளில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய டித்வா புயலால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அதிக காற்று வீசியிருந்தது.
இதன் காரணமாக வெள்ள நீருடன் குப்பைகள் வீதிகள் மற்றும் குடிமனைகளுக்குள் அடித்துவரப்பட்டு குப்பைக்காடாக காணப்படுகின்றது.
வீதியில் பயணிக்க முடியாத நிலை
வடமராட்சி கிழக்கு கடற்கரை வீதியில் பயணிக்க முடியாத நிலையில் குப்பைகள் தேங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதனால் அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் குடும்பங்கள் டெங்கு நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்