சீருடையில் காவல்துறை பொறுப்பதிகாரியின் செயல்: உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka
By Sumithiran
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள இரண்டு மதுபானசாலைகளில் இருந்து சீருடை அணிந்த நிலையில் வலுக்கட்டாயமாக இரண்டு மதுபான போத்தல்களை எடுத்துச் சென்ற காவல்துறை பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த காவல்துறை அதிகாரி விடுப்பு எடுத்துவிட்டு மீண்டும் பணியில் சேர வந்தபோது, மதுபோத்தல்களை எடுத்துச் சென்றார்.
சமூகப் பிரிவின் பொறுப்பாளராக கடமை

இந்த சம்பவத்தின் பின்னர் இந்த காவல்துறை பரிசோதகர் சுகயீனமுற்றுள்ளதாக வாகரையில் உள்ள உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த காவல் ஆய்வாளர் வாகரை காவல்துறையின் சமூகப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றுகிறார்.