2 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் ஆலய குருக்கள் கைது!
சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்ட ஆலய குருக்கள் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வைத்து குறித்த சந்தேக நபரை இன்று (19) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் கைது செய்யப்பட்டவர் அங்கு கடமையாற்றிவரும் 52 வயதுடைய குருக்களாவார்.
நீதிமன்றில் முன்னிலை
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய விசேட அதிரடிப்படை முகாம் பெறுப்பதிகாரி தலைமையிலனா குழுவினர் சம்பவதினமான இன்று பகல் அந்த ஆலய பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது,வலம்புரி சங்குகளுடன் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குருக்களை கைது செய்ததுடன் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான 2 வலம்புரிச் சங்குகளையும் மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட குருக்களையும் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களையும் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |