யாழ். வல்லிபுர ஆலய சமுத்திரத் தீர்த்தத்தில் நேர்ந்த துயரம் : ஒருவர் பலி...ஒருவர் மாயம்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Festival
By Sathangani Sep 18, 2024 04:48 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் - வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன்  மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.

வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் நேற்று (17) மாலை வடமராட்சி, பருத்தித்துறை - கற்கோவளம் கடற்பரப்பில் நடைபெற்றது.

சமுத்திர தீர்த்தத் திருவிழாவின் போதே குறித்த துயர சம்பவங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகளுடன் திருமலை ஊடகர்கள் சந்திப்பு

யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகளுடன் திருமலை ஊடகர்கள் சந்திப்பு

தீர்த்தத் திருவிழா

இந்த அனர்த்தங்களில், வடமராட்சி கிழக்கு, அம்பன் - குடத்தனையைச் சேர்ந்த 54 வயதுடைய கந்தசாமி வினோகரன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

யாழ். வல்லிபுர ஆலய சமுத்திரத் தீர்த்தத்தில் நேர்ந்த துயரம் : ஒருவர் பலி...ஒருவர் மாயம் | Vallipuram Temple Theertha Festival 1 Died 1 Miss

மேலும் சாவகச்சேரி - நுணாவிலைச் சேர்ந்த 30 வயதுடைய தயாரூபன் வைஷ்ணவன் என்ற இளைஞர் காணாமல் போயுள்ளார். இவர் வேம்படி மகளிர் கல்லூரியின் ஆசிரியராக பணியாற்றுகின்றார்.

நேற்று மாலை இடம்பெற்ற சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவைக் காண பல பாகங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.

வழமை போன்று வல்லிபுர ஆழ்வார் தீர்த்தமாடிய பின்னர், பக்தர்கள் கடலில் இறங்கி நீராடினர். இதன்போது, உயிரிழந்த குறித்த நபர் நீரில் மூழ்கியுள்ளார்.

வாக்களிக்க ஊருக்கு செல்லும் மக்களுக்கு வெளியான தகவல்

வாக்களிக்க ஊருக்கு செல்லும் மக்களுக்கு வெளியான தகவல்

காவல்துறையினர் விசாரணை

இந்த நிலையில் அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு கடற்கரையை அண்டிய பரப்பு மணல் நிறைந்தது என்பதால் சுமார் 1.5 கிலோமீற்றர் தூரம் அவரை டிரக்டர் வாகனத்தில் கொண்டு சென்று, பின்னர் நோயாளர் காவு வண்டி மூலமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.

ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்தனர்.

யாழ். வல்லிபுர ஆலய சமுத்திரத் தீர்த்தத்தில் நேர்ந்த துயரம் : ஒருவர் பலி...ஒருவர் மாயம் | Vallipuram Temple Theertha Festival 1 Died 1 Miss

மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், சுமார் இரவு 8.30 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரைக் காணவில்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து நேற்று இரவு கடற்படையினர் மற்றும் அந்தப் பகுதி கடற்றொழிலாளர்களின் உதவியுடன் அவரைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது. எனினும் நீண்ட நேரத் தேடுதலில் அவர் மீட்கப்படவில்லை.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி வேட்பாளர்

மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி வேட்பாளர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023