உக்ரைனிடம் இருந்து ரஷ்யா கைப்பற்றிய சொத்துக்களின் மதிப்பு! வெளியான தகவல்
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா கைப்பற்றிய சொத்துக்களின் மதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 06 மாதங்களாக ரஷ்யாக்கும் உக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் ரஷ்யா உக்ரைனின் இயற்கைவளங்கள் உள்ள சில முக்கிய பகுதிகளை கைப்பற்றியது.
அந்தவகையில், ரஷ்யா உக்ரைன் நாட்டின் நிலக்கரியில் 63%, எண்ணெய் வளத்தில் 11%, இயற்கை எரிவாயு வளத்தில் 20%, உலோக கனிம வளத்தில் 42% மற்றும் லித்தியம் போன்ற முக்கியத் தாதுக்கள் உட்பட அதன் அரிய பூமி வளங்களில் 33% ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
மொத்த மதிப்பு
ரஷ்யா இப்போது குறைந்தபட்சம் $12.4 டிரில்லியன் மதிப்புள்ள உக்ரைனின் முக்கிய இயற்கை வளங்களான ஆற்றல் மற்றும் கனிம வைப்புகளைக் கட்டுப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
மேலும், 11.9 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள சுமார் 30 பில்லியன்டொன்கள் கடின நிலக்கரி வளங்கள் ரஷ்ய கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

