இந்திய இராணுவம் நிகழ்த்திய வல்வை படுகொலை - 34 ஆவது நினைவு தினம் இன்றாகும்

Sri Lankan Tamils Jaffna
By pavan Aug 02, 2023 09:50 AM GMT
Report

இலங்கையில் தமிழர்களின் மிக நீண்ட கால வரலாறு என்று சொல்லப்படுவது மிக கொடூரமான படுகொலைகளாலும் உயிர்ப்பறிப்புகளாலும் தன்னை நிரப்பிக்கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் இலங்கையின் அரச படைகளாலும் இந்திய அமைதி காக்கும் படையினர் மற்றும் அரச ஆதரவு ஒட்டுக்குழுக்களாலும் நிகழ்த்தப்பட்டவை ஏராளம் அந்த துன்பியல் வரலாற்றின் அவரை பாகமாய் தாயக நிலப்பரப்பின் வட முனையில் தமிழரின் போராட்ட வரலாற்றிலும் உலகத்தமிழர்களின் உயர் தனித்துவமான பார்வைக்குரியதுமான வல்வெட்டித்துறை பகுதியில் கடந்த 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2 மற்றும் மூன்றாம் திகதிகளில் இலங்கையில் அமைதிகாக்கவென்ற போர்வையில் தாயகப்பரப்பில் களமிறக்கிவிடப்பட்டவர்களும் இலங்கை தமிழர் வரலாற்றில் இந்தியாவினால் படியச்செய்யப்பட்ட வரலாற்று கறையை படியச்செய்தவர்களுமாகிய இந்திய தரைப்படை ராணுவத்தினரின் துப்பாக்கிச்சூடு , மற்றும் ஏனைய படுகொலை வழிகளின் மூலமாக சுமார் 64 ற்கும் அதிகமானர்கள் கொலை செய்யப்பட்டும் சுமார் 43 பேர் படுகாயம் அடைய செய்யப்பட்டதுமான துன்பியல் வரலாற்றின் 34 வது நினைவு தினம் இன்றாகும் .

இலங்கையில் காலங்காலமாக தமிழர்களுக்கெதிராக தேசத்தின் மற்றுமொரு நிலப்பரப்பாக விளங்கிய தென்னிலங்கையில் வாழ்ந்த சிங்களவர்களினால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் இன அழிப்பு செயற்பாடுகளுக்கு உறுதுணையாக பாரத துணைக்கண்டத்தின் இந்திய தேசம் தனது ராணுவத்தினரை இலங்கைக்கு அனுப்பியதன் விளைவாக இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் அரங்கேற்றப்பட்ட மிக கொடூரமான படுகொலை நிகழ்வாக இது பதிவாகிறது .

இந்திய இராணுவம் நிகழ்த்திய வல்வை படுகொலை - 34 ஆவது நினைவு தினம் இன்றாகும் | Valva Massacre By Indian Army

இந்திய தேசம் தமது படைகள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்திருந்த போதும் குறித்த தாக்குதல்களில். உயிர் தப்பிய மற்றும் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட வாழும் சாட்சியங்கள் இன்றுவரை ஆதாரமாக இருந்து வருகின்றது தமிழீழ விடுதலைப்புலிகள் இந்திய அமைதிப்படைகள் மீது நடாத்திய தாக்குதலை அடுத்து ஏற்பட்ட சண்டையில் சிக்கியே குறித்த பொது மக்கள் உயிரிழந்ததாக இந்திய தரப்பு அறிவித்திருந்தது

ஆனாலும் பன்னாட்டு ஊடகவியலாளர்களான ரீட்டா செபஸ்தியன் , டேவிட் உசேகா மற்றும் உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்புகளான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமை அமைப்பு ஆகியன நேரில் கண்ட சாட்டியங்களை ஆவணப் படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டதன் விளைவாக அவை திட்டமிட்ட மனிதப்படுகொலைகள் என்பதனை உறுதி செய்தன.


குறித்த படுகொலையை அப்போதைய இந்திய பாதுகாப்பு அமைச்சாராக இருந்த ஜோர்ஜ் பெர்ணாண்டோஸ் இந்தியாவின் மைலாய் கொலைகளை ஒத்தவை என்று கருத்து வெளியிட்ட போதும் இந்த படுகொலைகளை அரங்கிற்றியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது காந்திய தேசத்தின் கறுப்புக்கறைகளில் ஒன்றாக பதிவாகி நிற்கிறது 34 ஆண்டுகள் கடந்த பின்பாகவும்

1989 ம் வருடம் எட்டாவது மாத த்தின் 2 ம் திகதி புதன்கிழமை முற்பகல் வேளையில் ஆரம்பிக்கக்பட்ட இக்கொடூர கொலைக்கள நிகழ்வு ஆரம்பமானது புலிகளின் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த தொகையளவிலான மேற்கொண்ட தாங்குதல்களில் பெருமளவிலான பொதுமக்களை சுட்டுக்கொல்லப்பட்டதோடு வர்த்தக நிலையங்களில் வைத்து எரியூட்டி கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

அது மாத்திரமன்றி அப்பகுதியில் தங்கியிருந்த பொதுமக்கள் தொடர்ச்சியாக பிடித்து வரப்பட்டு அங்கிருந்த மக்களின் மீது தமது துப்பாக்கி முனைகளை திருப்பி அப்பிரதேச மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தனர் அன்றைய நாளில் மொத்தமாக படுகொலை செய்யப்பட்ட 52 அப்பாவி தமிழ் மக்களின் உடலங்கள் அடையாளம் காணப்பட்டதாக அறிக்கையிட்டிருந்தது

அடுத்த நாள் ஓகஸ்ட் மாதம் 3 ம் திகதி வல்வெட்டித்துறை நகரில் இந்திய ராணுவப்டைகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சுற்றி வளைப்பை மேற்கொண்டது இதன்போது சுமார் 75 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்பட்டுகின்றது

இந்திய இராணுவம் நிகழ்த்திய வல்வை படுகொலை - 34 ஆவது நினைவு தினம் இன்றாகும் | Valva Massacre By Indian Army  

அவர்களில் நால்வர் உயிரிழந்ததகவும் இந்த ஊரடங்கு பற்றி அறியாத அயல்கிராம வாசிகள் அங்கு வந்ததுபோது அவர்களும் தாக்கப்பட்டு சிலர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது

இவ்வாறாக ஈழ தேசத்தின் வடபுலத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க வல்வெட்டித்துறை பகுதியில் இந்திய ராணுவம் ஆடிய அகோர உயிர்ப்பறிப்பு அரங்கேற்றத்திற்கு பலியான அப்பாவி பொதுமக்கள் அன்றைய நாளில் வடக்கு கிழக்கில் உயிர்பறிக்கப்பட்ட தமிழினப்படுகொலைகளோடு சேர்ந்து கொண்டது

இன்றைய நாளில் வலிகள் சுமந்த துயரத்தோடு துப்பாக்கி ரவைகளுக்கும் பசிகொண்ட அக்கினி சுவாலைகளுக்கும் இரையாகிப்போன அத்தனை உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்திக்காகவும் ஈழத்தமிழர்களின் வரலாற்று வலிகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஐபிசி தமிழ் பிரார்த்தனை செய்கிறது தாயக பரப்பில் படுகொலை செய்யப்பட்ட அத்தனை உறவுகளையும் இன்றைய நாளில் நினைவேந்துவோம்.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024