60 அடி பள்ளத்தில் பாய்ந்த வான்: இருவர் படுகாயம்
Srilanka
Colombo
van
By MKkamshan
ஹட்டன் - ரொசல்லை பகுதியில் சுமார் 60 அடி பள்ளத்துக்குள் பாய்ந்து வான் ஒன்று விபத்திற்குள்ளானது.
இந்த விபத்து வட்டவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வட்டவளைக்கும் ரொசல்ல சந்திக்கும் இடைப்பட்டபகுதியில் இன்று சுமார் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் பயணம் செய்த இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் வான் பலத்த சேதமடைந்துள்ளது. கொழும்பிலிருந்து வெலிமட நோக்கி சென்றுகொண்டிருந்த வானே இவ்வாறு விபத்துத்குள்ளாகியுள்ளது.
வானில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்