கல்வி அமைச்சுக்குள் நுழைந்து போராட்டம் - மீண்டும் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே!
Sri Lanka Police
Ministry of Education
Colombo
Sri Lankan protests
By Pakirathan
கல்வி அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 56 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று பேரணியாக வந்து கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்து கல்வி அமைச்சின் வளாகத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.
இந்தநிலையில், கல்வி அமைச்சின் வளாகத்தில் அத்துமீறி நுழைந்து அமைதியை சீர்குலைத்தமைக்காக குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
போராட்டம்
ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்குமாறு கூறியே இந்த போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி