வீட்டில் பணவரவு அதிகரிக்க வேண்டுமா : உடனடி தீர்வு தரும் ஒரே வழி
Vastu Tips
By Shalini Balachandran
எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் வீட்டில் பண வரவு ஏற்படாமல் விரயம் ஆகிக்கொண்டே இருக்கின்றது என்பது அணைவரினதும் ஒரு முக்கிய கவலையாகவே உள்ளது.
இதற்காக பணம் செலவழிப்பது இறை நம்பிக்கையுடனான விடயங்களை மேற்கொள்வது என பலதரப்பட்ட விடயங்களை அனைவரும் மேற்கொள்வதுண்டு.
இந்தநிலையில், வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் பண வரவை அதிகரிப்பதற்கு சில வழிகளை இந்த கதிவில் பார்க்கலாம்.
1. வீட்டின் நுழைவாயில்
- எப்போதுமே நாம் வசிக்கும் வீட்டின் நுழைவுவாயில் மிகவும் முக்கியமானது.
- ஏனெனில் பண வரவு உட்பட எதுவாக இருந்தாலும் வீட்டின் நுழைவாயிலில் இருந்து தான் வர வேண்டும்.
- அப்படியாக இருக்கும் போது வீட்டின் நுழைவாயில் மிகவும் தூய்மையாக இருப்பது அவசியம்.
- அதே நேரம் நன்கு அலங்காரம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
- அப்போது தான் வீட்டில் செல்வப் பெருக்கு ஏற்படும்.
2. வீட்டில் குப்பைகள்
- வீட்டில் தேவையில்லாத பொருட்களை தேக்கி வைக்க கூடாது.
- அதே போல உபயோகம் இல்லாத பொருட்கள், நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்கள், பழுதான பொருட்களை வைத்திருந்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் சேரும்.
- இதனால் செல்வத் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
- எனவே நாம் வீட்டில் பழைய பொருட்களை வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
3. வீட்டின் சமையலறை
- இரண்டாவதாக வீட்டின் சமையல் அறை தூய்மையாக இருப்பது அவசியம்.
- நிறைய பேர் வீட்டின் சமையலறையை தூய்மையாக வைத்திருப்பதில்லை.
- சமையலறை தூய்மையாக இருப்பது ஆரோக்கியமான வாழ்க்கையின் வெளிப்பாடாகும்.
- வீட்டினுள் செல்வம் பெருகுவதற்கு சமையல் அறை தூய்மையாக இருக்க வேண்டும்.
4. வீட்டின் கடிகாரம்
- வீட்டிற்குள் ஒரே ஒரு கடிகாரம் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
- வீட்டின் வெவ்வேறு அறைகளில் உள்ள கடிகாரங்களில் வெவ்வேறு நேரம் காண்பிக்க கூடாது.
- அனைத்து கடிகாரமும் சரியான நேரத்தைக் காண்பிக்க வேண்டும்.
- ஒரு வீட்டிலேயே மாறுபட்ட நேரங்கள் காண்பிப்பது நல்லதல்ல.
- வீட்டிற்குள் மணி பிளான்ட் வளர்ப்பது, மீன் தொட்டி அமைத்து வாஸ்துமீன் வளர்ப்பது நேர்மறை ஆற்றல் அதிகரித்து பண வரவு ஏற்படும்.
5. வீட்டில் நீர் சேமிப்பு
- பண சேமிப்பும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.
- எனவே வீட்டில் தண்ணீரை சேமித்து வைக்க முயற்சி செய்யுங்கள்.
- தண்ணீர் விரயம் ஆவது போல் இருந்தால் உடனடியாக சரி செய்யவும்.
- இதையடுத்து வீட்டில் நேர்மறை ஆற்றல் ஏறும்.
6. வீட்டில் பழுதடைந்த பொருட்கள்
- வீட்டில் எந்த பொருள் பழுதடைந்தாலும் அதை உடனடியாக சரி செய்யவும்.
- சரி செய்யாமல் இருந்தால் பண விரயம் அதிகமாகும்.
- சரி செய்துவிட்டால் பண வரவில் தடை இருக்காது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்