வற் வரி அதிகரிப்பு : மஹிந்த ராஜபக்ச விடுத்துள்ள எச்சரிக்கை
2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் 10,000 மில்லியன் டொலர்களை சர்வதேச பிணைமுறியங்களிடமிருந்து கடனாக பெற்றது, இதனால் தான் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு நலிவடைந்தது, என முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் அடுத்த ஆண்டு (2024) முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கவுள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற தேர்தலில் ஒருசில வாக்காளர்கள் கவனயீனமாக எடுத்த தீர்மானத்தின் பெறுபேற்றுடன் இன்றும் வாழ்கிறோம்.
மீண்டும் அவ்வாறான தவறான தீர்மானத்தை இந்த நாடு தாங்கிக் கொள்ளாது, வரி அதிகரிப்பு மற்றும் தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றும் வெளியிட்டபட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் 2024 ஆம் ஆண்டு வரிக் கொள்கை நாட்டின் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும். என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.