போப்பின் இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள்: வெளியான அதிர்ச்சி தகவல்!
போப் பிரான்சிஸ் (Pope Francis) உயிர் தப்ப வாய்ப்பில்லை என எச்சரிக்கப்பட்டதை அடுத்து வத்திக்கானில் இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
88 வயதான பாப்பரசர் பிரான்ஸிஸ், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (14) , வத்திக்கானில் (Vatican City) உள்ள வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் படைகள்
இதையடுத்து மேலதிக சிகிச்கைக்காக இத்தாலியின் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாப்பரசர் பிரான்ஸிஸுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடுமையான நிமோனியா பாதிப்பால் அவதிப்படும் போப் பிரான்சிஸ் ஒருவேளை உயிரிழந்தால் அவரது இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வத்திக்கானில் போப்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்கும் சுவிஸ் படைகள் அவரது இறுதி சடங்குகளை ஒத்திகை பார்த்து வருவதுடன், போப்பாண்டவரின் மரணம் தொடர்பிலான தயாரிப்புகளை செய்து வருவதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால், வத்திக்கானில் உள்ள சுவிஸ் படைகளின் தலைவர் Christian Kühne இது தொடர்பான மொத்த தகவல்களையும் மறுத்துள்ளதுடன், சுவிஸ் படைகள் வழக்கமான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
