14 வயது சிறுமி துஸ்பிரயோகம்- 12 வயது சிறுவன் கைது!
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 14 வயதான சிறுமி ஒருவர் தாய்மையடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுமி கடந்த மூன்று தினங்களிற்கு முன்பாக சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்போது அவர் தாய்மையடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்தால் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது குறித்த சிறுமியின் 12 வயதான சகோதரனே துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளார் என சிறுமி தெரிவித்துள்ளார். அதனையடுத்து பொலிஸார் சிறுவனைக் கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
குறித்த சிறுவன் தற்போது சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுமி வவுனியா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.