வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
வவுனியா (Vavuniya) - கோவில்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவமான நேற்றைய தினம் (25.12.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றயதினம் இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்.
காவல்துறை விசாரணை
இதன்போது கோவில்குளம் பகுதியில் சென்ற மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ் அராலிபகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
