கொடூரமாக கத்திக்குத்திற்கு இலக்கான இளைஞன்- சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவ குழாமின் அயராத முயற்சியின் பயன்!

sri lanka vavuniya attack surgery emergency northern province
By Kalaimathy Feb 07, 2022 09:19 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

வவுனியாவில் மிகவும் கொடூரமான முறையில் கத்திக்குத்துக்கிலக்கான இளைஞன் ஒருவர் வைத்தியர்களின் அதிதீவிர முயற்சியின் பயனாக காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திக் குத்துக்கு இலக்காகி இதயப் பெருநாடி( Aorta) கிழிந்த நிலையில், 01.02.22 அ‌ன்று இரவு 8 மணியளவில் ஓமந்தை பாலமோட்டை பகுதியில் 32 வயதுடைய இளைஞரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் உக்கிரமடைந்த நிலையில் இவருக்கு நெஞ்சிலும், வயிற்றிலும் மிக ஆழமாக பலமுறை குத்தப்பட்டுள்ளது. அதீத இரத்தப் போக்கினால் மயக்கமுற்ற நிலையிலும் குடல் வெளித்தள்ளிய நிலையிலும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு அன்றைய தினம் இரவு 9.15 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார்.

வயிற்றினுள்  குருதிப்பெருக்கு தொடர்ந்ததோடு, சுவாசப்பை மற்றும் சுவாச குழாய்கள் கிழிந்தமையால் { Lung and tracheo bronchial injury} ஏற்பட்ட நெஞ்சறை காற்று கசிவினாலும் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த நபர், அவசர சிகிச்சை குழுவினரின் கடும் முயற்சியினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

சத்திரசிகிச்சை குழுவினரால் இருபக்க நெஞ்சினுள்ளும் துளையிடப்பட்டு குழாய்கள் அனுப்பப்பட்டு நுரையீரலை செயலிழக்க செய்த காற்று வெளியேற்றப்பட்டு சத்திரசிகிச்சை கூடத்திற்கு அனுப்பப்பட்ட்டார்.

வைத்தியர் யோகானந்த் தலைமையிலான மயக்க மருந்து வைத்திய குழாமினரின் கடும் போராட்டத்திற்கு மத்தியில், சத்திர சிகிச்சை நிபுணர்களான வைத்தியர் வரணிதரன் மற்றும் வைத்தியர் ஜயந்தன் இருவரும் இணைந்து அறுவைசிகிச்சையை மேற்கொண்டிருந்தனர்.

ஆழமான கத்திக்குத்து ஏற்பட்டதையடுத்து இரத்தக் குளமாக இருந்த வயிற்றை ஆய்ந்தபோது மேல் வயிற்றில் பாய்ந்த கத்தி இரைப்பையை துளைத்துச் சென்று கணையச் சுரப்பியை( Pancreas) கிழித்துக்கொண்டு மண்ணீரல் நாடியையும்( Splenic artery) இதயப் பெருநாடியையும்( Aorta) கிழித்திருந்த நிலையில் இரத்தம் பீறிட்டு பாய்ந்து கொண்டிருந்தது.

விரைந்து செயற்பட்ட சத்திரசிகிச்சை நிபுணர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் நுணுக்கமான முறையில் இரத்த நாடிகளை சரிசெய்து குருதிப்பெருக்கை கட்டுப்படுத்தினர். இதன்பின்னர், குடலிலும் இரைப்பையிலும் ஏற்படுத்தப்பட்டிருந்த 5 துளைகளும் (gastric and small bowel perforations) சரிசெய்யப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படடு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது உடல் நிலைதேறி வருகிறார்.

இவ்வாறு, இதயப் பெருநாடி கிழிந்தவர்களை காப்பாற்றுவது அரிதிலும் அரிது. இவ்விடயத்தில், இணைந்து பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களதும், குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி, சத்திரசிகிச்சை கூடம் மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஊழியர்கள் மயக்க மருந்து வைத்தியர்களது உழைப்பு மெச்சுதலுக்குரியது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025