வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
Vavuniya
By Pakirathan
இன்றைய தினம் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
தற்போது அதிகரித்துள்ள வரி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரிய சங்கத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில்
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இலஞ்ச ஊழலை நிறுத்து, வரியை குறை, பணத்தை எடுத்தவரிடம் கேட்பதே நீதி - எங்களிடம் கேட்பது அநீதி, வரி செலுத்த தகுதியுடைய அனைவரினதும் பட்டியல் உள்ளதா போன்ற பதாதைகள் ஏந்தப்பட்டிருந்தது.