வவுனியாவில் இடம்பெறும் சம்பவங்களை இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது - செல்வம் எம். பி சீற்றம்

Sri Lanka Police Vavuniya Selvam Adaikalanathan
By Sumithiran Jul 24, 2023 11:02 PM GMT
Report

வவுனியாவில் இடம்பெறும் சம்பவங்களை இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடும் தொனியில் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார், அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனந்தெரியாதவர்களின் தாக்குதலில் ஒருவர் மரணம்

வவுனியாவில் இடம்பெறும் சம்பவங்களை இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது - செல்வம் எம். பி சீற்றம் | Vavuniya Can No Longer Watch The Incidents

வவுனியாவில் என்ன நடக்கின்றது. தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக ஒருவர் மரணித்ததுடன் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களும் எரிகாயங்களுக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மார்ச் மாதம் 07ம் திகதி நான்கு பேர் படுகொலையா அல்லது தற்கொலையா என்று தெரியாத நிலையிலே இன்று வரை இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது அது தொடர்பாக என்ன நடந்துள்ளது என்று கூட தெரியாத சூழலிலே, மீண்டும் ஒரு பயங்கரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இது கண்டிக்கத்தக்க விடயம்.

காவல்துறையின் மெத்தன போக்கு

வவுனியாவில் இடம்பெறும் சம்பவங்களை இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது - செல்வம் எம். பி சீற்றம் | Vavuniya Can No Longer Watch The Incidents

வவுனியாவை பொறுத்தவரை நம்பிக்கையுடன் வந்து போக கூடிய மக்களும், நம்பிக்கையுடன் வாழக்கூடிய மக்களுக்கும் இந்தசம்பவம் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான சம்பவங்களிற்கு காவல்துறையினர் தமிழர்கள் என்ற காரணத்தினால் பேசாமல் விடுகின்ற நிலையை கையாள்கிறார்களா? என்ற கேள்வி எழுகின்றது.இதே நிலைமை தென்னிலங்கையில் நடைபெற்றால் உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டிருப்பார்கள்.

தமிழர்கள் எந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களாக தான் இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. இந்த நேரத்தில் காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சரிடம் வெளிப்படையான ஒரு கருத்தை கேட்க விரும்புகிறேன். வவுனியாவில் உள்ள ரவுடி கும்பல் மற்றும் தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சட்டத்தை மதிக்காதவர்கள் வாழ்கின்ற இந்த வவுனியாவில் அதனை அடக்குவதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

அமைதியான இடமாக இருந்த வவுனியா தற்போது மிக மோசமான வன்முறையை கொண்ட இடமாக மாறியுள்ளது. மக்கள் அச்சப்படுகின்றனர், பாடசாலை மாணவர்கள் பாடசாலை செல்ல அச்சப்படுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்திலும் காவல்துறையினர் மெத்தன போக்கை காட்டக்கூடாது என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

அத்தோடு இனியும் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும். 26ம் திகதி அதிபரை சந்திக்க உள்ளோம். அப்போது இவ்விடயத்தினை மிக முக்கிய பிரச்சினையாக விவாதிப்பேன்.

ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் தமிழர்களிற்கு எது நடந்தாலும் பரவாயில்லை என எண்ணுகின்ற காவல்துறையினர் அல்லது அரசாங்கம் இதைத்தான் செய்யப்போகின்றதா என நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த நிலைமையை தொடர விடாமல் நீதியினை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையினை காவல்துறையினர் எடுக்க வேண்டும். அத்தோடு நாங்கள் அதற்கு ஒத்துழைப்பு செய்ய தயாராக இருக்கிறோம் என்றார். 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025