தனிமைப்படுத்தலில் இருந்த நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
police
vavuniya
death
quarentine
katkuli
By Kalaimathy
வவுனியா கற்குழி பகுதியில் தனிமைப்படுத்தலிற்குட்படுத்தப்பட்டிருந்த நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் உட்பட அவரின் குடும்பத்தினர் அண்மையில் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை வீட்டிலிருந்த அவரை காணாமல் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். இதன்போது கிணற்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.
கற்குழி பகுதியை சேர்ந்த கணேசன் இளங்குமரன் என்ற நபரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்