வவுனியாவில் மீட்கப்பட்ட பெருந்தொகை கஞ்சா: இளஞ்செழியனின் அதிரடி நடவடிக்கை
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
Drugs
Court of Appeal of Sri Lanka
By Shadhu Shanker
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கபட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது, இன்று (24) காலை வேளையில் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் முடிவுறுத்தபட்ட 12 வழக்குகளில் 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா முன்னிலைப்படுத்தப்பட்டது.
இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ்
வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் , நீதிமன்ற காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் எரிக்கப்பட்டது.
சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு மக்கள் நடமாட்டம் மற்றும் அருகே வீடுகள் அற்ற பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கஞ்சா எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி