வவுனியாவில் சமைத்துக் கொண்டிருந்தவேளை வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு
police
vavuniya
investigation
explore
gas stove
By Sumithiran
வவுனியா, காத்தார்சின்னக்குளம் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, காத்தார்சின்னக்குளம், லக்சபானா வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது இன்று (24.12) பிற்பகல் திடீரென் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இதனையடுத்து குறித்த பெண் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி பீ.பீ.மானாவடு தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தடவியல் காவல்துறையினரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி