வவுனியா மாநகரசபை உப தவிசாளருக்கு எதிரான வழக்கு விசாரணை
வவுனியா மாநகரசபை உப தவிசாளருக்கு எதிரான வழக்கு 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா மாநகரசபைக்குட்பட்ட வைரவபுளியங்குளம் வட்டாரத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி சார்பிலு போட்டியிட்ட ப. கார்த்தீபன் 33 வாக்குகளை பெற்று தோல்வியடைந்திருந்தார்.
எனினும் அவரது கட்சிக்கு கிடைத்த போனஸ் ஆசனத்தினூடாக மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன் உதவி மேயராகவும் ஆளும் கட்சிகளால் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
வழக்கு தாக்கல்
எனினும் அவர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்குட்பட்ட வட்டாரத்திலேயே வாக்குரிமையை கொண்டுள்ளதால் வவுனியா மாநகரசபையில் போட்டியிட்டமை மற்றும் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக வவுனியா மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

