மர்மமான முறையில் பலியான உயிரினங்கள் - விவசாயியின் விசம செயல்!
வவுனியா விவசாய நிலத்தில் மர்மமான முறையில் மாடுகள் இறந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வவுனியா பூம்புகார் கிராமத்திலே நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் போது 10க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாகவும் உரிமையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தினுள் பிரதேசவாசிகளின் மாடுகள் சில புகுந்து அங்குள்ள உழுந்து மற்றும் நெற் பயிர்களை மேய்ந்துள்ளதாகவும் இதனை அவதானித்த விவயாய நில உரிமையாளர் ஆத்திரமடைந்து மாடுகளிற்கு யூரியா மற்றும் பூச்சிகொல்லி மருந்தையும் நீரில் கலந்து குடிக்க வைத்துள்ளார்.
முறைப்பாடு
அந்த நீரை மடுகள் பருகியமையாலேயே உயிரிழந்துள்ளதாக கிராம கமக்கார அமைப்பினர் மற்றும் மாட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனைவிட நீரை பருகிய ஏனைய மாடுகளும் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் மாட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு ஈச்சங்குளம் காவல்துறையினர் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.