வவுனியாவில் விஷமிகளின் வெறிச் செயல் - காணாமற் போனார் பிள்ளையார்
vavuniya
missing
pillaiyar
By Sumithiran
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை காணாமற் போயுள்ளது.
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அமைத்து பிள்ளையார் சிலை வைத்து நீண்டகாலமாக மக்கள் வழிபட்டு வந்தனர்.
வவுனியா நகரின் இலுப்பையடிப் பகுதியில் உள்ள வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், அப் பகுதியால் பயணத்தில் ஈடுபடும் மக்கள் என பலராலும் வழிபடப்பட்டு வந்த பிள்ளையார் சிலையே மாயமாகியுள்ளது.
இனந்தெரியாத நபர்கள் குறித்த சிலையை அங்கிருந்து அகற்றியுள்ளதுடன், சிலை இருந்த இடம் வெறுமையாக காட்சியளிக்கின்றது.
