வடபகுதியில் வெடிகுண்டுகள் - தீவிர விசாரணையில் காவல்துறையினர்!
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kalaimathy
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வேப்பங்குளத்தில் உள்ள தனியார் காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட மலசலகூடத்தினை புனரமைக்கும் செயற்பாட்டினை மேற்கொண்ட போதே குழியில் இருந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 60 மில்லி மீற்றர் ஷெல் ஒன்றும் கைக்குண்டு ஒன்றும், சிறிய ரக மிதிவெடி ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நெளுக்குளம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி