வெடுக்குநாறிமலை விவகாரம்! உண்ணாவிரத போராட்டத்தை மறைக்கும் காவல்துறையினர்
சிறைக்குள் உண்ணாவிரதம் இருக்கும் வெடுக்குநாறிமலை அதிசிவன் ஆலயத்தில் கைதுசெய்யப்பட்ட எட்டுப் பேர் குறித்து பொய்யான செய்தியை சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 8 ஆம் திகதி வெடுக்குநாரிமலை அதிசிவன் ஆலயத்தில் சிவவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பாவி தமிழ் பக்தர்களை காவல்துறையினர் அடாத்தாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த பக்தர்கள் தமக்கான நீதி கோரி சிறைக்குள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும், இந்த போராட்டத்தை சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மறுக்கின்றார்.
அதாவது அவர்கள் உண்ணாவிரதம் இருக்கவில்லை. அவர்கள் உணவினை உண்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
விரிவான தகவல் கீழ் உள்ள காணொளியில்,
சிறைக்குள் உண்ணாவிரதம் இருக்கும் வெடுக்குநாரிமலை அதிசிவன் ஆலயத்தில் கைதுசெய்யப்பட்ட எட்டுப்பேர் குறித்தும் பொய்யான செய்தியை கூறும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர். தற்போதைய நிலவரத்தை விளக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் @skajendren pic.twitter.com/QbJEN26M93
— Jera Thampi (@JeraThampi) March 14, 2024