வெடுக்குநாறிமலையில் காவல்துறையினரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் விடுவிப்பு!
Tamils
Vavuniya
Sri Lanka Police Investigation
By Laksi
வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் காவல்துறையினரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
வவுனியா நீதிமன்றத்தால் இன்று (4) அவை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக் காெண்டிருந்த பாேது சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த நெடுங்கேணி காவல்துறையினர் அங்கு இருந்த 8 பேரை கைது செய்ததுடன் ஆலயத்தில் இருந்த பாெருட்களையும் எடுத்துச் சென்றிருந்தனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இதனை தாெடர்ந்து நீதவான் நீதிமன்றின் அனுமதியோடு காவல்துறையினரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்