வெடுக்குநாறியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதில் சந்தேகம் - மூன்று தமிழர்கள் கைது

Vavuniya Sonnalum Kuttram
By Vanan Apr 01, 2023 01:32 PM GMT
Report

வவுனியா - வெடுக்குநாறி மலையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள நிலையில், தொல்பொருள் திணைக்களத்தால் ஆட்சேபம் தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுக்ககோரி காவல்துறையினருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் சிரமதானத்தில் ஈஈடுபட்ட மூவர் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, அண்மையில் வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதிசிவன் வளாகத்தில் தெய்வ சின்னங்கள் அழிக்கப்பட்டிருந்தது.

சிலை வைக்க அனுமதி

வெடுக்குநாறியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதில் சந்தேகம் - மூன்று தமிழர்கள் கைது | Vedukunari Adilingeswarar Temple Issue

இதன் தொடர்ச்சியாக நெடுங்கேணி காவல்துறை மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை சிலைகளை சேதப்படுத்தியோர் கைது செய்யப்படவில்லை.

இது தொடர்பாக சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரணையை முன்னெடுக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இவ்வேளையில் சர்வமத தலைவர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கூட்டம் நடத்தி குறித்த இடத்தில் மீண்டும் சிவலிங்கம் உட்பட்ட இறைவனின் சிலைகளை வைக்க உத்தரவாதத்தை பெற்றிருந்தனர்.

இதற்கு மறுநாள் வவுனியாவில் வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தின் அழைப்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன், உயர் தரப்புகளுக்கு வழங்குவதற்காக மகஜர்கள் அரசாங்க அதிபரிடம் வழங்கப்பட்டது.

இந் நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த இடத்தில் சிலை வைக்க அமைச்சரவை அனுமதித்ததாக அறிக்கை வெளியிட்டார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதிக்கு தான் நேரடியாக வந்து சிலையை வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியாவில் சில பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் தேவையற்றது. அதிபர் சிலையை வைக்க உத்தவிட்டுள்ளார். அது நடக்கும் என தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் நாளை அதிகாலை 1மணி முதல் 4 மணி வரையான காலத்தில் சிவலிங்கத்தை பி்ரதிஸ்டை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தொல்பொருள் சின்னங்களை மாற்றியமைக்க முடியாது

வெடுக்குநாறியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதில் சந்தேகம் - மூன்று தமிழர்கள் கைது | Vedukunari Adilingeswarar Temple Issue

எனினும் நிர்வாகத்தினரை மீறி சிலர் அப்பகுதியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் பிரசன்னத்துடன் துப்பரவு பணிகளில் ஈடுபட்ட நிலையில், ஆலய பகுதியில் நிர்வாகத்தினருக்கும் அங்கு வந்த சிலருக்குமிடையில் மனக்கிலேசம் ஏற்பட்டதனால் தமது திட்டம் நிறைவேறாமல் போய்விடும் என்ற ஆதங்கத்தில் நிர்வாகத்தினர் கோவில் வளாகத்தில் இருந்து வெளியேறியிருந்தனர்.

இருந்தபோதிலும், குறித்த பகுதிக்கு காவல்துறையினர் வருகை தந்து அங்கு இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் அவதானிப்பில் இருந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கு சென்று தொல்பொருள் சின்னங்களை மாற்றியமைக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளதுடன்,

நெடுங்கேணி காவல்துறையினருக்கு தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்குமாறு நீதிமன்ற வழக்கு இருக்கும் நிலையில் எவ்வித பணிகளையும் முன்னெடுக்க முடியாது என தெரிவித்தும் அவ்வாறு இடம்பெற்றால் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் குறித்த இடத்திற்கு பாதுகாப்பு கோரியும் கடிதம் வழங்கியுள்ளனர்.

இந் நிலையில் அப்பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்ட மூவரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துr் சென்றுள்ளதுடன், நாளைய தினம் சிவலிங்கம் பி்ரதிஸ்டை செய்வதில் சந்தேகம் எழுந்துள்ளது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023