தந்தையின் சமாதியில் உறுதிமொழி எடுத்த வீரப்பன் மகள்
நாம் தமிழர் கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வீரப்பனின் மகள் வித்யாராணி தனது தந்தையின் சமாதியில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்னர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வீரப்பனின் மகள் வித்யா ராணி வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்பாக மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் வீரப்பனின் சமாதியில் அவரது வேட்பு மனுவை வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
வேட்புமனுவை தாக்கல் செய்தார்
பின்னர் கிருஷ்ணகிரிக்கு வந்த அவர், கிருஷ்ணகிரி பழையபேட்டை, 5 ரோடு ரவுண்டானா வழியாக பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர், தனது வேட்புமனுவை கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எம்.சரயுவிடம் தாக்கல் செய்தார்.
தேர்தலில் வென்றால்
தான் வெற்றி பெற்றால் விவசாயிகள், மலைவாழ் மக்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட உள்ளதாகவும் வீரப்பனின் மகளாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மக்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி (34) பி.ஏ.பி.எல் படித்துள்ளார். தற்போது கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார். மேலும், கிருஷ்ணகிரியில் மழலையர் பள்ளியின் தாளாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |