முருங்கைக்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
நாட்டில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 2,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (8) குறித்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும், அந்த பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1980 ரூபாவாக பதிவாகியிருந்தது.
முருங்கைக்காயின் சில்லறை விலை
மீகொட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கறிமிளகாய் 1,200 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,100 ருபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே 2,000 ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கரட்டின் விலை நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (8) 650 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள வேறு எந்த ஒரு பொருளாதார மையத்திலும் நேற்று முருங்கைக்காய் விற்பனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |