உச்சம் தொடும் மரக்கறிகளின் விலை! யாழ்ப்பாண சின்ன வெங்காயத்தின் விலை
உள்நாட்டு யாழ்ப்பாண சின்ன வெங்காயம் கிலோகிராம் ஒன்று 400 முதல் 500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, வர்த்தகர்கள் மாற்று சந்தைகளை நோக்கித் திரும்பியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக ஈரப்பதன் மற்றும் எல் நினோ வானிலை மாற்றங்களே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஈரப்பதன் தொடர்பான சிக்கல்களால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக கொத்தமல்லி கிலோகிராம் ஒன்று 500 ரூபாயிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
மரக்கறி இறக்குமதி சந்தை
மரக்கறி இறக்குமதி சந்தையில், இந்திய மற்றும் சீன உருளைக்கிழங்குகள் மொத்த விலைப்பட்டியலில் இல்லாத நிலையில், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு கிலோகிராம் ஒன்று 160 முதல் 170 ரூபாய் வரையான விலையில் பிரதானமாக விற்பனை செய்யப்படுகிறது.

உள்நாட்டு உருளைக்கிழங்கு 370 முதல் 380 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
சந்தையில் உள்நாட்டு பெரிய வெங்காயம் இல்லாத நிலையில், குளிரூட்டப்படாத (Non-AC) இந்திய பெரிய வெங்காயம் கிலோகிராம் 270 முதல் 300 ரூபாய் வரையிலும், குளிரூட்டப்பட்ட வெங்காயம் 220 ரூபாயிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, இந்திய சின்ன வெங்காயம் கிலோகிராம் ஒன்று 650 முதல் 660 ரூபாய் வரையிலும், பெங்களூர் 'சிப்லா' சின்ன வெங்காயம் 300 ரூபாயிற்கும் விலை குறிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு யாழ்ப்பாண சின்ன வெங்காயம் கிலோகிராம் ஒன்று 400 முதல் 500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |