மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் தடம் புரண்டு விபத்து!
Sri Lanka Police
Mullaitivu
By Laksi
முல்லைத்தீவின் முள்ளியவளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மரக்கடத்தில் ஈடுபட்ட வாகனம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து தடம் புரண்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(23) மாலை இடம்பெற்றுள்ளது.
பெறுமதி மிக்க தேக்கமரக்குற்றிகள்
முள்ளியவளையில் இருந்து சட்டத்திற்கு முரணாக தேக்கமரக்குற்றிகளை ஏற்றிக்கொண்டு சென்ற புதுக்குடியிருப்பு பகுதியில் முகவரியாக கொண்ட சிறிய ரக வாகனம் கேப்பாபிலவு இராணுவ படைத்தளத்திற்கு முன்னால் உள்ள வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வடிகாலுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது, குறித்த வாகனத்தில் பெறுமதி மிக்க தேக்கமரக்குற்றிகள் காணப்பட்டுள்ளது.
இதில் பயணித்தவர்கள் தப்பி சென்ற நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த முள்ளியவளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்