வாகன இறக்குமதி : மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ரணில்
அடுத்த வருடம் முதல் படிப்படியாக வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த சிநேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த ஆண்டு தனியார் வாகனங்களின் இறக்குமதியை தளர்த்துவதில் கவனம் செலுத்துகிறீர்களா என அவரிடம் கேட்டப்பட்டது, அதற்கு அவர்,
அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக
அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக இதனை செயல்படுத்துவோம் என்று நம்புகிறோம். கார் சந்தையில் உள்ள பிரச்சனைகளை நான் அறிவேன். ஆனால் இன்னும் எங்களின் இருப்புத் தொகை நல்ல நிலையில் இல்லை.
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை
கார்கள் இறக்குமதியைத் தவிர மற்ற அனைத்தையும் அனுமதித்துள்ளோம். கார்கள் இறக்குமதி நடந்தால், நாடு சுமுக நிலைக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசிய வாகனங்களை படிப்படியாக இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |