கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனப்பெண்ணின் செயல் வளைத்துப் பிடித்த காவல்துறை

Bandaranaike International Airport Colombo Sri Lanka China
By Shalini Balachandran Mar 13, 2024 09:26 AM GMT
Report

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தன்னுடைய இளைய பெண் பிள்ளையை இதுவரை காலமும் கவனித்துக்கொண்ட இலங்கை பெண்ணிடம் கொடுத்துவிட்டு தப்பியோடுவதற்கு முயன்ற சீனப் பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் விமானத்தில் நுழைவதற்கு தயாராக இருந்த நிலையிலேயே நேற்று(12) இரவு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் 35 வயதான இந்த பெண் தன்னுடைய 58 வயதான தாயுடன் டுபாயில் வாடகை வீடொன்றில் வசித்து வந்ததுடன் பிரபலமான விடுதிகளில் நடனமாடும் நடனக் கலைஞராக இருந்துள்ளார்.

அணு ஆயுதத்தை பயன்படுத்த தயார் :அச்சுறுத்தும் புடின்

அணு ஆயுதத்தை பயன்படுத்த தயார் :அச்சுறுத்தும் புடின்

விமான நிலையம்

அவருக்கு மூன்று மற்றும் ஆறு வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்ததுடன் தன்னுடைய சீனத் தாயை விட இலங்கை பெண்ணை அதிகமாக நேசித்ததால் தம்மைப் பராமரிக்கும் இலங்கைப் பணிப்பெண்ணிடம் அவ்விரு பிள்ளைகளும் மிகுந்த பாசம் காட்டியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனப்பெண்ணின் செயல் வளைத்துப் பிடித்த காவல்துறை | Chinese Woman Arrested At Katunayake Airport

குருநாகல் பொல்கஹவெல பொத்துஹெரவில் வசிக்கும் 53 வயதுடைய இந்த பணிப்பெண் தனது சேவையை முடித்துக்கொண்டு அண்மையில் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

பணிப்பெண்ணின் பிரிவால் அவ்விரு பிள்ளைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் அக்கம் பக்கத்தினர் தெரிந்து கொள்ளாத வகையில் அந்த சீனப்பெண் நடந்துகொண்டுள்ளார்.

ஜோ பைடன் தலைமையில் நடைபெறவுள்ள வெசாக் நிகழ்வுகள்

ஜோ பைடன் தலைமையில் நடைபெறவுள்ள வெசாக் நிகழ்வுகள்

பிள்ளைகள்

இது தொடர்பில் எதனையும் கூறாத சீனப் பெண் இலங்கை பணிப்பெண்ணுக்கு அழைப்பை எடுத்து தான் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள வருகைதர உள்ளதாகவும், தங்களை அழைத்துச் செல்ல கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தருமாறும் அழைத்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனப்பெண்ணின் செயல் வளைத்துப் பிடித்த காவல்துறை | Chinese Woman Arrested At Katunayake Airport

அதனடிப்படையி​ல் அவர்களை வரவேற்பதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு பணிப்பெண் சென்ற நிலையில் சீனப்பெண் தன்னுடைய தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு டுபாயில் இருந்து வருகைதந்த விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திங்கட்கிழமை(11) இரவு 10.30 மணியளவில் வந்தடைந்துள்ளார்.

அங்கு அவர்கள் சந்தித்துக்கொண்டதுடன் சில மணிநேரம் அன்பை பகிர்ந்து கொண்ட சீனப்பெண், தன்னுடைய சிறிய குழந்தையை இலங்கை பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இந்தியா முன்னெடுக்கவுள்ள திட்டம்

வடக்கு மாகாணத்தில் இந்தியா முன்னெடுக்கவுள்ள திட்டம்

கைது

இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய காவல்துறையினருக்கு இலங்கை பணிப்பெண் தகவலளித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனப்பெண்ணின் செயல் வளைத்துப் பிடித்த காவல்துறை | Chinese Woman Arrested At Katunayake Airport

இதையடுத்து டுபாய் நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த சீனப்பெண்ணும் அவருடைய தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்விருவரையும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் 21 இந்திய இளைஞர்கள் கைது

இலங்கையில் 21 இந்திய இளைஞர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்