வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த வாகனம்!
accident
Kilinochchi
By Thavathevan
பளை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பளை நகர பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் ரக வாகனமொன்று கடைத்தொகுதியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பளை நகரப்பகுதியில் ஏ9 வீதியில் கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று பளை பேருந்து தரிப்பிடத்திற்கு திரும்பியுள்ளது.
இதனை அவதானிக்காமல் யாழ் நோக்கி வந்த பிக்கப் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பளை நகரப்பகுதியில் அமைந்துள்ள புத்தக கடை ஒன்றினை உடைத்து உட்சென்றுள்ளது.
குறித்த விபத்தில் கடைத்தொகுதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்தது. விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.






1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி