630 கிலோ பீடி இலைகளுடன் சிக்கிய வாகனம் - சாரதி தப்பியோட்டம்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kiruththikan
சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 630 கிலோ பீடி இலைகள் தலவில காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவ புலணாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கிணங்க கல்பிட்டி உதவி காவல்துறை அத்தியட்சகர் சுஜீவ டி சொய்சா தலைமையில் தலவில பொவிஸ் புறக்காவல்துறை நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் அடிப்படையிலேயே குறித்த பீடி இலைகளை கைப்பற்றப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் கருத்து தெரிவிக்கையில், பீடி இலைகளை கல்பிட்டியிலிருந்து புத்தளம் நோக்கி கொண்டு செல்லும் போது அதிகாரிகள் துரத்தி சென்று பிடித்ததாகவும் இதனையடுத்து குறித்த வாகன சாரதி வானை அகர அனுவ பிரதேசத்தில் விட்டு தப்பிச் சென்றதாவும் தெரிவித்துள்ளனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 11 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்