மீண்டும் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்..!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
இலங்கையில் வாகன மீள் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த கமகே ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதி தொடர்பில் எதிர்காலத்தில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளோம்.
இறக்குமதி தொடர்பான தீர்மானம்
இறக்குமதி தொடர்பான தீர்மானங்களை தம்மால் மேற்கொள்ள முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார். அதனை நிதியமைச்சே இறுதி செய்ய வேண்டும்.
எனவே குறித்த செயற்பாடுகள் நிதியமைச்சின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் எதிர்காலத்தில் நிதியமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி