அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் பிணையில் விடுவிப்பு
புதிய இணைப்பு
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரதன தேரர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை பண்டாரதூவ காவல் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாக இன்று (23.05.2025) காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
காவல்துறையினரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்த இரு பிள்ளைகளை பாதுகாப்பற்ற முறையில் முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் காவல் நிலையத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு (Batticaloa) மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் (Ven. Ampitiye Sumanarathana) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினரால் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை உஹன காவல் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் குழப்பம்
உஹன காவல்துறையினரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்த இரு பிள்ளைகளை பாதுகாப்பற்ற முறையில் முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் அந்த காவல் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குறிப்பிடப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
