உலக கச்சா எண்ணெய் சந்தையில் எதிரொலிக்கும் அரசியல் அதிர்வுகள்!
உலக சந்தைகளில் மிதமாக கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ, கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 56.96 டொலராக குறைந்துள்ளது.
எண்ணெய் விலை
சர்வதேச தரத்திலான பிரென்ட் ரக கச்சா எண்ணெய் விலை, 34 சென்ட் குறைந்து 60.41 டொலராக பதிவாகியுள்ளது.
வெனிசுலாவின் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியானது 1990 களில் கிட்டத்தட்ட 35 லட்சம் பேரல்களாக இருந்த நிலையில் தொடர் தடை விதிப்புகளால் தற்போது 11 லட்சம் டன் பேரல்களாக குறைந்துள்ளது.

மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வெனிசுலா கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா தலையிடும் என்ற ட்ரம்ப் அறிவிப்பால் உற்பத்தி அதிகரிக்கப்படும் என கருதப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த ஆறு மாதங்களாக தேவை அதிகரிக்காததால் கச்சா எண்ணெய் உற்பத்தி சமநிலையில் நீடித்துள்ளது.
தற்போது அது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதி, அதன் சந்தை விலை சிறிது சரிவு கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 14 மணி நேரம் முன்