மதுரோ கைதின் பின்னணியில் உள்ள அரசியலை அம்பலமாக்கிய வெனிசுலா!
அமெரிக்காவிற்கு வெனிசுலாவின் எண்ணெய் வளத்தின் மீது பேராசை என வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்கா கைது செய்துள்ளது.
அத்தோடு அந்நாட்டை அமெரிக்காவே நிர்வகிக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
நாட்டின் எரிபொருள்
இதனுடன், அந்நாட்டின் எண்ணெய் வளத்தையும் கட்டுப்படுத்தப்பபோவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், “நமது நாட்டின் எரிபொருள் மீது அமெரிக்கா பேராசை கொண்டுள்ளது என்பதை அறிவீர்கள்.
போதைப்பொருள்
அதற்கு போதைப்பொருள் கடத்தல், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைபற்றிய அனைத்து பொய்களும் சாக்குபோக்காக இருந்தன.
அனைத்து தரப்பினரும் பயனடையும் எரிசக்தி உறவுகளுக்கு வெனிசுலா தயாராக உள்ளது.

அமெரிக்கா, வெனிசுலா இடையே உறவு மோசமாக உள்ளது மற்றும் வரலாற்றில் இதற்கு முன்பு அப்படி இருந்தது இல்லை.
பிரிவினைவாத, பாசிச மற்றும் சமூக வெளிப்பாடுகளை அனுமதிக்க முடியாது ஏனெனில் அவை நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 5 மணி நேரம் முன்