வெண்பா யாப்பும் பௌத்த உளவியலும்: மதுரன் தமிழவேள் உரை
தமிழின் மிகப்பழைய கவிதை வடிவமான வெண்பா பற்றிய இணையவழி உரையாடல் நிகழ்வொன்று நாளை ஞாயிறு அன்று இடம்பெறவுள்ளது.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம், அமெரிக்காவின் வலைத்தமிழ் தொலைக்காட்சி, தமிழும் கலையும் பயில்வதற்கான தளமான uchchi.com ஆகியவை இணைந்து நடத்தும் இந்த நிகழ்வில் பாவலர் மதுரன் தமிழவேள் சிறப்புரையாற்றுகிறார்.
'இக்கணத்தில் வாழ்தல்: தமிழின் வெண்பா யாப்பும் பௌத்த உளவியலும்' என்ற தலைப்பில் மதுரன் தமிழவேளின் உரை இடம்பெறவுள்ளது. மனதை ஒருமுகப்படுத்தும் கருவியாக மொழியையும் இலக்கணத்தையும் பயன்படுத்துவது எப்படி என்பதை பௌத்த உளவியல் நோக்கில் இந்த உரை விளக்கவுள்ளது.
தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் பாவரசு முகவை திருநாதன் தலைமையில் இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் இடம்பெறவுள்ள இந்த இகழ்வில் தமிழ்க்கவிதை ஆர்வலர்கள் ஜூம் செயலியின் வழி இணைந்து கொள்ளலாம்:
Meeting ID: 945 0336 0817 Passcode: 123123
வரவினை இவ் இணைப்பின் வழி தெரியப்படுத்தலாம்:https://wa.me/message/KSIIMXIHT6CEO1

