மிகவும் அருவருக்கதக்க செயல் - இனியும் இடம்கொடோம் - சஜித் சூளுரை
இலங்கையில் ஊடக அடக்குமுறையை மேற்கொள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு இனியும் இடங்கொடுக்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஊடக அடக்குமுறைக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சூளுரைத்துள்ளார். தென்னிலங்கை கடற்பரப்பில் கடந்த மே மாதத்தில் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல்வளம் மற்றும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் எதிர்காலத்தில் இதுதொடர்பான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பது தொடர்பாக ஆராயும் விசேட பேச்சுவார்த்தை கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்றது.
நீதியமைச்சர் அலிசப்ரி தலைமையில் நீதி அமைச்சில் நடைபெற்ற இந்தப்பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சித்தலைவரும் கலந்துகொண்டிருந்தார். பேச்சுவார்த்தையின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவது ஊடகங்களின் கடமை. அந்தவகையில் நாட்டில் தற்போது மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக தடுப்பூசி ஏற்றுவதில் இருக்கும் பிரச்சினை, விவசாயிகளுக்கு தேவையான உரம் இல்லாத பிரச்சினை, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினை என பல பிரச்சினைகள் மக்களுக்கு இருக்கின்றன.
இதில் சில பிரச்சினைகள் அரசாங்கத்துக்கு தெரியாமல் இருக்கும். அதனால் ஊடகங்கள் இந்த பிரச்சினைகளை வெளிப்படுத்தும்போது, அதுதொடர்பில் கவனம் செலுத்தி அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமை.
மாறாக மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதை தடுக்கும் வகையில் அவ்வாறான ஊடகங்களை அடக்குவதற்கு அரசாங்கத்துக்கோ வேறு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் இன்று மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஊடகங்களை அடக்குவதற்கு அரசாங்கத்தில் இருக்கும் சிலர் நடவடிக்கை எடுத்துவருவது தொடர்பில் நான் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தி இருந்தேன்.
ஆனால் ஊடக அமைச்சர் அதுதொடர்பில் நாடாளுமன்றத்தில் எந்த அறிவிப்பையும் மேற்கொள்ளாமல் தற்போது வேறு விடயங்களை தெரிவித்து வருகின்றார்.மேலும் இந்த அரசாங்கம் எதிர்க்க்கட்சியில் இருக்கும் ஊடகவியலாளர்களுடன் மிகவும் அன்பாகவும் அவர்களின் தோளுக்கு மேல் கைபோட்டுக்கொண்டும் ஊடக உரிமைகளை பாதுகாப்பதாகவும் தெரிவித்து வந்தது.
ஆனால் ஊடகங்களின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது ஊடகங்களை அடக்கும் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது. இதுமிகவும் அருவருக்கத்தக்க செயலாகும்”எனத் தெரிவித்தார்.
ශ්රී ලංකාව ආශ්රිත මුහුදු තීරයේදී පසුගියදා ගිනිගෙන දැවුණු එක්ස්ප්රස් පර්ල් නෞකාව සම්බන්ධයෙන් සිදුකෙරෙන පරීක්ෂණවල වත්මන් තත්ත්වය පිළිබඳව අධිකරණය අමාත්යාංශයේ පැවැති සමාලෝචන රැස්වීමට විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතා ද සහභාගි විය. #lka pic.twitter.com/zs3pB5BcQw
— Samagi Jana Balawegaya (@sjbsrilanka) July 12, 2021