ரஷ்யாவின் போர்க்குற்றம் அமெரிக்காவின் கையில் சிக்கிய ஆதாரம்
russia
ukraine
us
war crime
By Sumithiran
உக்ரைனில் ரஷ்யா போர்க்குற்றம் புரிந்ததற்கான மிகவும் நம்பகமான ஆதாரம் உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
சி.என்.என். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான மிகவும் நம்பகமான தகவல்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா அதன் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளுடன் சேர்ந்து ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடைசெய்வது மற்றும் ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பது போன்ற சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, ஆயுத உதவிகளையும், நிதி உதவியும் செய்து வருகிறது. அத்துடன் அமெரிக்க நட்பு நாடுகளும், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி