உலகத் தமிழர்களுக்கு பெருமை மிகு தருணம் -கனடாவில் அங்குரார்ப்பணம்
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் முழுமனதோடும் பெருமிதத்தோடும் பொருளாதரப் போர் செய்தால் - சிறிலங்கா அரசாங்கத்தையே அடிபணிய வைக்கலாம் என அமெரிக்க மருத்துவர் எலின் சாண்டர் தெரிவித்திருந்தார்.
2009 டிசம்பர் 6 ஆம் திகதி அமெரிக்க நியூஜேர்சி மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதற்கு மகுடம் சேர்ப்பது போல கனடா ,ரொறன்டோவில் பங்குச்சந்தை அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. உலகத் தமிழர்களுக்கு பெருமை மிகு தருணம் இது.
அங்குரார்ப்பண நிகழ்வு
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் கனடாவில் நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகிப்பவருமான றோய் ரட்ணவேல் அவர்களின் அதீத முயற்சியில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழ் சமுதாயம் பயனடையும் வகையில் ரொறன்டோ பங்குச்சந்தை TAMILS IN FINANCE அங்குரார்ப்பண நிகழ்வு 16.01.2023 அன்று இடம்பெற்றது.
அங்கு அவர் உரையாற்றுகையில், இந்த ஒன்றுகூடல் எங்கள் சார்பாக எங்கள் பெற்றோர்கள் செய்த தியாகங்களுக்கு அடையாளமாக இருந்தது என தெரிவித்தார்.
30 வருடங்களுக்கு முன் இலங்கையில் உள் நாட்டு யுத்தம் காரணமாக நமது பெற்றோர்கள் ,மற்றும் சிறார்கள், பலர் கனடாவுக்கு இடம்பெயர்தோம் .தங்களின் இளைய சந்ததியினரின் எதிர்காலத்தை மனதிற் கொண்டு கண்டங்களை கடந்து கனடாவுக்கு வந்து சேர்ந்தனர். பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து எம் அயரா உழைப்பு மூலம் இந்த மைல் கல்லை எட்டியுள்ளோம்.
துன்பத்திலிருந்து செழிப்புக்கு சென்றுவிட்டோம்
ஒரு தலைமுறையில் நாம் துன்பத்திலிருந்து செழிப்புக்கு சென்றுவிட்டோம்.பாதிக்கப்பட்டவர்களாகிய நாம் வெற்றியாளர்களாக மாறியுள்ளோம். Tamils In Finance தற்செயலாக உதித்த ஒரு முயற்சியே. அடுத்த தலைமுறை தமிழர்களை நிதிச் சேவை துறையில் நுழைய ஊக்குவிக்கும் வகையில் நிதிச்சேவை ஒன்றை உருவாக்க எண்ணிணேன் அதன் விளைவே Tamils In Finance.
கனேடிய தமிழர்களுக்கு இது ஒரு பெருமையான தருணம் மற்றும் ஒரு மைல்கல் நிகழ்வு. TMX உடன் இணைந்து CI ஃபைனான்சியல் இதைச் செய்ய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என்ன ஒரு நாள்! உங்களின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கும் முயற்சிக்கும் தமிழர்கள் நிதியில் (TiF) உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் என அவர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஒருபோதும் அமைதியாக, சத்தமின்றி இருந்துவிடக் கூடாது.நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், மறைந்து போய்விடாதீர்கள்.
