மிரிஹான போராட்டத்தின் அதிர்வு! ஒருவர் கடத்தப்பட்டாரா? - கணவரைப் பார்க்காமல் செல்லமாட்டேன் என கதறும் மனைவி (காணொலி)
அரச தலைவர் இல்லத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக கூறி காவல் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளவர் தாக்குதல் நடத்தியவர்கள் அல்ல என்று பெண் ஒருவர் காணொலி ஊடாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அந்த காணொலியில்,
எனது கணவன் காவல்துறை நிலையத்தில் இருக்கின்றார். அவர் ராகமை அரச வைத்தியசாலையில் பணிபுரிகிறார். நான் இணையத்தளம் ஒன்றில் வேலை செய்கிறேன்.
ஊடகவியலாளர்களை தாக்கியதால், எனது ஊடகத்தில் பணியாற்றும் ஊடகவியலாளரை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் எனது கணவர் சென்றார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செல்லவில்லை.
காவல்நிலையத்தில் பிடித்து வைத்திருப்பவர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் அல்ல. நான் காலை 4 மணி வரை எனது கணவரை தேடிக்கொண்டு இங்கு இருந்தேன். எனது கணவர் எங்கு இருக்கின்றார் என்று எவரும் கூறவில்லை.
என்னை அலைக்கழித்தனர். நான் அங்குமிங்குமாக வீதிகளில் சென்றேன். வீதிகளுக்குள் வைத்து இளைஞர்களை தாக்கினர். விசேட அதிரடிப்படையினர் இளைஞர்களை தாக்கினார்கள்.
என்னை கெட்ட தூஷண வார்த்தைகளால் பேசினர். எனது கணவனை தாக்கும் சத்தத்தை தொலைபேசியில் கேட்டேன். ஏன் தாக்குகின்றீர்கள் என்று கேட்ட போது ஏன் நீ கணவனை அவை தலைவருக்கு எதிரான போராட்டத்திற்கு அனுப்பினாய் என்று கேட்டனர்.
வீதிகளுக்குள் மறைவிடங்களில் வைத்து இளைஞர்களை அதிரடிப்படையினர் தாக்கினர். நான் எனது இரண்டு கண்களால் அதனை பார்த்தேன். தாக்கப்படும் நபர்களில் எனது கணவன் இருக்கின்றாரா என்று தேடினேன்.
எனது கணவனின் முகத்தை பார்க்க செல்ல மாட்டேன் எனக் கூறினேன். அப்போதுதான் இளைஞர்களுடன் எனது கணவனை அழைத்து வந்த இங்கு இறக்கினர்.
இவர்கள் மீது இடி விழும். ராஜபக்சவினரை ஆதரிக்கும் காவல்துறை அதிகரிகளும் அடியோடு ஒழிய வேண்டும். நாங்கள் படும் கஷ்டங்களுக்கு ராஜபக்சவினர் குடும்பத்துடன் இல்லாதுபோக வேண்டும்.
எனது கணவனை தேடி இரவு 12 மணிக்கு வீதியில் இறங்கி நடந்தே வந்தேன். தம்மை தாக்குவதாக கூறியவர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்லவே எனது கணவர் வந்தார். எனது கணவனின் முகத்தை பார்க்காமல் செல்ல மாட்டேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
