திடீரென பதவி விலகிய இந்திய உப ஜனாதிபதி
இந்தியாவின் (India) குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் (Jagdeep Dhankhar), தனது பதவியிலிருந்த விலகுவதாக அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உடல்நலக் காரணங்களை மேற்கோள்காட்டி அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில், ராஜ்யசபையின் தலைவராக அவர் கூட்டத்தை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.
பதவி விலகல்
அவரது பதவி விலகல் கடிதம், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(அ) படி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்தநிலையில், "எனது உடல்நலத்தை முன்னுரிமையாக்குவதற்காகவும், மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவதற்காகவும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(அ) படி, நான் உடனடியாக குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன்," என அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
