டிப்பர் - பேருந்து மோதி விபத்து! ஸ்தலத்திலேயே பலியான பெண்
பொல்கஹவெல காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட குருநாகல் - கொழும்பு வீதியில் ரத்மல்கொட பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஸ்தலத்திலேயெ பெண்ணொருவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
டிப்பர் ரக வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து முல்லைத்தீவில் இருந்து மஹரகம நோக்கி பயணித்துக் காண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் பதவிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மேலும் காயமடைந்த 10 பேர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
