தேர்தலில் அமோக வெற்றி - மொட்டுவின் அசைக்க முடியாத நம்பிக்கை
மக்களின் மனங்களில் மொட்டு இருப்பதால், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மொட்டுக் கட்சிக்குப் பாரிய வெற்றி கிடைக்கும் என அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கொழும்பு மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணம்
இதன்போது நேற்றையதினம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது.
நாட்டுக்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது தொடர்பில் நேற்றைய பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பசிலின் ஒத்துழைப்பு
பசில் ராஜபக்ச தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறாரா என வினவப்பட்டபோது, அவர் பூரணமாக தனது ஆதரவை வழங்குவதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
