வடக்கு - கிழக்கு இனவாத முரண்பாடுகளுக்கு விதுரவே கதாநாயகன் : சாடுகிறார் சாணக்கியன்
வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்படும் இனவாத முரண்பாடுகளுக்கு விதுர விக்ரமநாயக்கவே கதாநாயகன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(06) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் கடும் இனவாதி தமிழர் மரபுரிமைகளை அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளார், தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தை பதவி விலக்கியதற்கு பதிலாக அதிபர் இவரை பதவி விலக்கியிருக்க வேண்டும்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வடக்கு மற்றும் கிழக்கில் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட இவர் புத்தசாசன அமைச்சராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.