வெளிநாடொன்றில் பேருந்து விபத்து : குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலி!
வியட்நாமில் (Vietnam) இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வியட்நாமில் ஹனோயிலிருந்து - டானாங்கிற்கு நேற்று (25) பேருந்து சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பேருந்து திடீரென வீதியை விட்டு விலகி போக்குவரத்து அடையாள பலகைகளில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
16 பேர் காயம்
இந்த விபத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வியட்நாமில் வீதி விபத்துகள் அதிகமாக இடம்பெறும் நிலையில், அந்நாட்டு தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் அதிகாரபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் வீதி விபத்துகளால் 5,024 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
